ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் பட்ஜெட்டை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.