இஸ்லாமாபாத்: காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 5ம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உரையாற்றினார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் ஷெரீப் பேசும்போது, ‘‘காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த வாக்குறுதிகளை இந்தியா நிறைவேற்ற வேண்டும். இந்தியா ஆயுதங்களை குவிப்பது பிராந்திய மக்களின் தலைவிதியையோ மாற்றாது. முன்னேற்றத்திற்கான வழி அமைதியாகும்” என்றார்.
The post காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளையும்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும்: பாக். பிரதமர் ஷெரீப் விருப்பம் appeared first on Dinakaran.