பார்டர் – கவாஸ்கர் டிராபியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வசம் கையளித்த இந்திய அணியை சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடி வருகிறார். அனைத்துக்கும் மேலாக வர்ணனையில் விமர்சனம் செய்யும் முன்னாள் வீரர்களை இப்போது ஆடும் மூத்த வீரர்கள் ‘அவுட்சைட் நாய்ஸ்’ (outside noise), என்றும் ‘அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள்’ என்றும் அராஜகமாகப் பேசி வரும் கேப்டன்கள், மூத்த வீரர்களுக்கு கவாஸ்கர் சாட்டையடி கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் திட்டமென்ன என்று கேட்டபோது கவாஸ்கர் தன் சாட்டையடி கிண்டல் தொனியில், “அரே! எங்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் தெரியாது. நாங்கள் டெலிவிஷனில் காசுக்காக பேசி வருகிறோம். எங்களின் அறிவுரையெல்லாம் யார் கேட்கிறார்கள்? நானும், இர்பான் பதானும் டிவியில் சும்மா அரட்டையடித்தோம். எங்கள் விமர்சனங்களுக்குக் காது கொடுப்பவர்கள் யாரும் இல்லை. நாங்கள் கூறுவதெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடட்டும்.