அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, ஆர்க்டிக் தீவிலுள்ள கிரீன்லாந்தைப் பெறுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து, விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.