கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி விரைவில் மலிவு விலை உணவகங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ கடந்த 2023, டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து முனையத்தை தினந்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்கள் அமைக்கப்படவில்லை. மேலும், இங்கு தற்போது செயல்படும் உணவகங்களில் காலை மற்றும், இரவு நேரங்களில், விலை அதிகமான உணவு வகைகளே விற்கப்படுகின்றன.