கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கவின் நாயகனாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.