புதுடெல்லி: கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தினார்.
இது குறித்து நாடாளுமன்ற விதி எண் 377-யின் கீழ் மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் பேசியது: “கடந்த 2013-ஆம் ஆண்டுக்கும், 2016-ஆம் ஆண்டுக்கும் இடையே இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 5,000 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.