புதுடெல்லி: கடந்த 11 மாதங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9.22 லட்சம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி கீழமை நீதிமன்றங்களில் 4.44 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 11 மாதங்களில் 9.22 லட்சம் அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள 4.53 கோடி வழக்குகளில், சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 1.10 கோடியாகவும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3.43 கோடியாகவும் உள்ளது” என்றார்.