சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தங்கியிருந்துள்ளார்.