பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இருப்பினும், பதிலடி நடவடிக்கையில், இந்தியப் படைகள் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக உடைத்து தாக்கின. இதன் மூலமாக இந்தியப் படைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை உலகிற்கு அனுப்பியது.