குஜராத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து 48 பேர், ஒரு பேருந்தில் பல மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா சென்றனர். மகாரஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயிலில் இருந்து, குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். குஜராத்தின் டாங் மாவட்டத்தின் சாபுதாரா மலைப் பகுதியில் நேற்று காலை 4.15 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை தாண்டி 35 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்தது.