சென்னை: கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு தலைவர் பொன்குமார் அளித்த பேட்டி: பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட்டால் பொறியாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதின் மூலம் பொறியாளர்கள் துறை முறைப்படுத்தப்படும், போலிப் பொறியாளர்கள் தவிர்க்கப்பட்டு தரமான கட்டுமானத்தை உருவாக்க இயலும்.
பதிவு பெற்ற பொறியாளர்கள் கட்டுமானப் பணிகளை செய்யும் நிலை உருவாகும் போது வேலையற்ற பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். குஜராத், கர்நாடகாவிலும் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post குஜராத், கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைத்திட வேண்டும்: அரசுக்கு பொன்குமார் கோரிக்கை appeared first on Dinakaran.