கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்கா சரணாலயத்திற்கு உட்பட்ட கிராம பகுதிக்குள் நேற்று சிறிய கரடி குட்டி ஒன்று புகுந்தது. கரடி குட்டியை பார்த்த கிராம மக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் கரடி குட்டியை பத்திரமாக மீட்டு பொன் குழி பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு கரடி குட்டியின் உடலை பரிசோதித்து அதன் உடலில் காயங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். பின்னர், அதன் தாய் கரடி இருக்கும் பகுதியை கண்காணித்து அப்பகுதியில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.
The post குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி குட்டி மீட்பு appeared first on Dinakaran.