
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. தீபாவளி பண்டிகை நேற்று முன் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
திரைபிரபலங்களும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

