ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலை, எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கவுரிசங்கர் ராஜூ (53), என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவன் நித்தீன் (8) மற்றும் சக மாணவர்கள் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, பள்ளி அருகே இருந்த தண்ணீர் சேமிப்பு குட்டை அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நித்தீன் குட்டையில் தவறி விழுந்தான். இதை பார்த்த சக மாணவன் தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜீவிடம் கூறினான். உடனடியாக அவர் ஓடி வந்து குட்டையில் உள்ள நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மாணவனை மீட்க உள்ளே குதித்துள்ளார். அப்போது மாணவன் நித்தீன் மற்றும் தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜீ ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவன் மற்றும் தலைமை ஆசிரியர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post குட்டையில் மூழ்கி மாணவன் பலி மீட்க முயன்ற ஹெச்.எம் சாவு: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.