குன்னூர்: குன்னூர் ஆரம்ப சுகாதார மையம் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக மலைப் பாதையின் சாலையோரத்திலும், மலை ரயில் பாதையிலும் யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில், இன்று காலை கே.என்.ஆர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரத்தில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை வீடியோ எடுத்துள்ளனர். காட்டு யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
The post குன்னூர் அருகே ஆரம்ப சுகாதார மையம் பகுதியில் யானைகள் முகாம் appeared first on Dinakaran.