நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட பாஜகவுக்கு கிழக்கு, மேற்கு மாவட்ட புதிய தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். பொது வாழ்க்கையில் நேர்மை உடைய குற்ற பின்னணி இல்லாதவர்களை தேர்வு செய்ய கட்சியினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அனைத்து கட்சியினரும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என பல கட்சியினரும் பணிகளை முடிக்கிவிட்டிருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள பாஜகவும் சட்டப்பேரவை தேர்தலில் இடங்களை பிடிக்கும் வகையில் வியூகம் அமைத்து வருகிறது. இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.