புதுடெல்லி: கும்பமேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவினை நிராகரித்துள்ளது. மேலும் மனுதாரர் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், "கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் மற்றும் கவலைக்குரிய விஷயம். ஆனால் மனுதாரர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடலாம். ஏற்கெனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதிவிசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.