சென்னை: குரு சிஷ்யா உறவு முறை தான் இசைக்கலைஞர்களையும், கலையையும் என்றென்றும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் அவரது சகோதரியான பெங்களூரு ஆத்மாலயா அகாடமியின் நிர்வாகியான பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மஜா வெங்கடேஷ் சுரேஷ் ஆகியோரது தந்தை மறைந்த கூத்து கலைஞர் சாக்யார் ராஜன் நினைவாக இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்றது.