சென்னை: குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 2ஏ பணிகள் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைதேர்வு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 26ம் தேதி மாலை 5.45க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘‘ஆன்சர் கீ சேலன்ச்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குரூப் 2ஏ முதன்மை தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.