*தீயணைப்பு துறையினர் அகற்றினர்
குலசேகரம் :குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்த சிறுவன் 6ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். சிறுவன் தனது கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்துள்ளார். நேற்று அந்த காப்பை மேலும் கீழுமாக கையில் போட்டு விளையாடியுள்ளார். அப்போது காப்பு கையின் மூட்டுப் பகுதிக்கு அருகில் சிக்கி கொண்டது. இதனால் கையின் சதைப்பகுதி இறுகி வலியும் வீக்கமும் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் கையில் எண்ணெய் பூசி காப்பை அசைத்து கழற்ற முயற்சித்தனர். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி குலசேகரத்தில் ஒரு நகை கடைக்கு அழைத்துச் சென்று வெட்டி எடுக்க முயன்றும் முடியவில்லை.
பைக் ஒர்க் ஷாப் ஒன்றில் வைத்து கையில் சிக்கியிருந்த காப்பை அகற்ற முயன்றும் பயனளிக்கவில்லை. இதனையடுத்து சிறுவனை குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து தீயணைப்பு வீரர்கள் சிறுவன் கையில் சிக்கியிருந்த காப்பை வெட்டி அகற்றினர். அதுவரை பயத்தில் வலியுடன் இருந்த சிறுவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
The post குலசேகரம் அருகே சிறுவன் கையில் சிக்கிய காப்பு appeared first on Dinakaran.