கரூர்: குளித்தலை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்தனர். காரில் சிக்கிய 5 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரமாக போராடி மீட்டனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்
The post குளித்தலை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.