சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
200 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் யு-14 சிறுமியர் பிரி வில் பருத்திப்பட்டு வேலம்மாள் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு விகாஷ் மந்த்ரா அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.