“புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம் இன்றைக்கு திமுக-வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி வருகிறது. பழனிசாமி இனி சுற்றுபயணம் போகவேண்டுமானால் போலீஸ் பாதுகாப்புடன் தான் போக வேண்டி இருக்கும். ஒன்று அவர் திருந்த வேண்டும் அல்லது மற்றவர்கள் அவரை திருத்த வேண்டும். இல்லாவிட்டால் 2026 தேர்தலோடு அதிமுக-வுக்கு மூடுவிழா நடத்திவிடுவார் பழனிசாமி” என்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன். முழுக்க முழுக்க பாஜக-வின் பங்காளி முகமாகவே மாறிவிட்ட அவர் இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியிலிருந்து…
“அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால், பாஜக-வுடன் கூட்டணி சேர வேண்டும்” என்று சொல்லி இருக்கிறீர்கள். டெல்லியில் இருந்து இப்படி சொல்லி அனுப்பினார்களா?