சென்னை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு ரூ.300 கோடி முன்பண மானியம் தமிழ்நாடு அரசு விடுவித்தது. கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேசன் கடைகளை நடத்துகின்றன.
2024-25-ம் ஆண்டுக்கான முன் பண மானியமாக ரூ.300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.
அரசு விடுவிக்கும் மானியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை செலவினங்களுக்கான மானியமாக ரூ.300 கோடி வழங்குமாறு கூட்டுறவு துறை சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.300 கோடி மானிய முன்பன மானியம் விடுவித்தது
இந்த மானிய தொகை மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மானியம் தொகையை அரசு விடுவித்துள்ளதால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவித்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.