சுந்தர்.சி – வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதன் ஹீரோ சுந்தர்.சி தான் என்றாலும் 2.45 நிமிட ட்ரெய்லர் முழுவதுமே வடிவேலுவின் அக்மார்க் ஆட்டம்தான் அதகளமாக உள்ளது.
க்ரைம் த்ரில்லர் ஒன்லைனில் காமெடி ட்ராக்குகளை புகுத்தி, தனக்கே உரிய பாணியில் சுந்தர்.சி பொழுதுபோக்கு அம்சங்களை தூவி இருப்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றனர். குறிப்பாக, வடிவேலு உடனான சுந்தர்.சி-யின் ‘அண்டர்ப்ளே’ பாணி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்பதையே இருவரும் தோன்றும் காட்சிகள் உறுதிபடுத்துகின்றனர்.