சாமர்கண்ட்: ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதன் 11-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் சோங்கி டானுடன் மோதினார்.
இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றார்.