கோழிக்கோடு: கேரளாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், தமரசேரி நகரில் ஒரு தனியார் டியூஷன் சென்ட்டர் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று நடனமாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக் கலைக்கு பயன்படுத்தப்படும் நன்சுக் (கயிறால் இணைக்கப்பட்ட இரு கம்புகள்) என்ற ஆயுதத்தால் தாக்கியதில் எம்.ஜே. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரின் தலையில் காயம் எற்பட்டுள்ளது.