கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பயிலும் திருநங்கை மாணவர்கள் தனியாக விடுதி கட்டித் தர வேண்டும் என நீண்டகாலமாக கோரி வந்தனர். இதையடுத்து, அப்பல்கலைக்கழக வளாகத்தில் மாநிலத்திலேயே முதல் முறையாக திருநங்கை மாணவர்களுக்கு தனியாக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதை மாநில சமூக நீதித் துறை அமைச்சர் ஆர்.பிந்து நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து திருநங்கை மாணவர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் கிடைப்பது சிரமம். கிடைத்தாலும் வாடகை அதிகம். இப்போது தனி விடுதி திறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம்" என்றார்.