கேரள அரசின் மொத்த வருவாயில் மது மற்றும் லாட்டரியின் பங்களிப்பு மட்டும் 25 சதவீதம் அளவுக்கு உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் இது தொடர்பாக வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள அரசின் வருவாயில் இரண்டு முக்கிய அங்கங்களாக மது மற்றும் லாட்டரி டிக்கெட் விற்பனை உள்ளது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,24,486.15 கோடியாக இருந்தது. இதில், மது மற்றும் லாட்டரி விற்பனையின் மூலமாக மட்டும் ரூ.31,618.12 கோடி பெறப்பட்டுள்ளது.