புதுடெல்லி: டெல்லியின் உத்தம் நகர் சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பால்யன் மீது மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, இவரும் வெளிநாட்டில் இருக்கும் தாதா கபில் சங்வானும் பேசுவது போன்ற குரல் பதிவு வெளியானது. அதில் தொழிலதிபரிடமிருந்து மிரட்டி வசூலிக்கப்பட்ட பணம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவதாக போலீஸார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் அவரை கடந்த 1-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, டெல்லி முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு வழக்கில் நரேஷ் பால்யன் கைது செய்யப்பட்டார்.