கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோத்தகிரியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போதைய அமமுக நிர்வாகியுமான கர்சன் செல்வம் என்பவருக்கு நேற்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் நேற்று காலை 11.30 மணிக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கொடநாடு எஸ்டேட் சம்பந்தமாகவும், தற்கொலை செய்த எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் குமார் பற்றியும் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
The post கொடநாடு வழக்கு அமமுக நிர்வாகியிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.