கோவை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில், சிபிசிஐடி போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானை நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சயான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்றும், வரும் 24ம் தேதி ஆஜராக உள்ளதாகவும் அவரது வக்கீல் சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
The post கொடநாடு வழக்கு: சயான் விசாரணைக்கு ஆஜராகவில்லை appeared first on Dinakaran.