சென்னை: “சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரத்தின்போது கம்பம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.ராமகிருஷ்ணன் பேசுகையில், “கம்பம் தொகுதி, கம்பம் நகராட்சியில் திடக்கழிவில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விலையின்றி வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கையில், “நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பை கொட்டும் இடம் நகரின் மையப் பகுதிக்கு வந்துவிடுகிறது. அதனால் மக்கள் குப்பை கொட்டும் இடத்தை அப்புறப்படுத்தச் சொல்கிறார்கள். மாற்று இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.