கொடைக்கானல்: கொடைக்கானல் ஓராவி அருவி யில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் வழியில் பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் இருந்து 9 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் ஓராவி அருவிக்குச் சென் றுள்ளனர். அப்போது, ஓராவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிப் பகுதியில் ஆபத்தான முறையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பரத் (25) நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.