திண்டுக்கல்: கோடை சீசன் துவங்கியதன் அறிகுறியாக கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் கோடைவாசஸ்தலங்களில் கொடைக்கானல் மலைகளின் இளவரசியாக திகழ்கிறது. காரணம் இங்கு ஆண்டுதோறும் நிலவும் சீதோஷ்ணநிலை தான். கோடை காலம் துவக்கத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கத்தால் செடிகள் கருகி காட்டுத்தீ ஏற்பட்டது. துவக்கத்திலேயே வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தீ வனப்பகுதியில் பரவாமல் கட்டுப்படுத்தினர். அந்த அளவிற்கு மலைப்பகுதியிலேயே வெயிலின் தாக்கம் இருந்தது.