கொடைக்கானல்: இந்தியாவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் விளைபொருட்களில் காபி முதலிடம் பெறுகிறது. உலகிலேயே பெட்ரோலியத்துக்கு அடுத்ததாக 2-வது வியாபாரப் பொருளாக காபி இருக்கிறது. எத்தியோப்பியாவையும், மத்திய ஆப்பிரிக் காவையும் தாயகமாக கொண்டது காபி. இந்தியாவில் கி.பி.16-ம் நூற்றாண்டில் பாபா – புடன் என்பவரால் கொண்டு வரப்பட்ட காபி விதைகள் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலைத்தோட்டத்தில் முதன்முதலாக பயிரிடப்பட்டன.
அதன்பிறகு, கி.பி.18-ம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தால் தென் இந்தியாவில் வியாபாரரீதியாக காபி பயிரி டப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காக்பர்ன் என்பவரால், ஏற்காடு பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் கொடைக்கானல் கீழ்பழநி மலைப் பகுதியில் முக்கிய விவசாயமாக வேரூன்றி விவசாயிகளின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த பயிராக காபி விளங்குகிறது.