இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குதுகலமாக துவங்கிய கொடைக்கானல் கோடை விழாவில், லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 58வது மலர் கண்காட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் துவங்கியது.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளுடன் இணைந்து அமைச்சர் பெருமக்களும் கண்டு ரசித்தனர்.