சென்னை: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.