சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் ஏப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, ஆலந்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.