வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்துள்ள படம், ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராமு இயக்கியுள்ளார்.
இந்தப் படம் இந்த வருடக் கோடையில் வெளியாக இருக்கிறது. “புதிய கதைசொல்லல் முறையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ரசிகர்களை கண்டிப்பாக இது ஆச்சரியப்படுத்தும். முழுமையான பொழுதுபோக்குப் படமாக நிச்சயம் இருக்கும்” என்கிறது படக்குழு