கோடை விடுமுறையின்போது, விரைவு ரயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறை விட்ட பிறகு பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகம் உள்ள விரைவு ரயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.