சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே, வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பறவைகளுக்கு இந்த கோடை காலத்தில் உணவு, நீர் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு ‘நீரும், உணவும் அளிப்போம்’ :முதல்வர் பதிவு appeared first on Dinakaran.