சென்னை: ‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்து கடந்த இரு வாரங்களாக பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி 10 நகரங்களிலும், 28-ம் தேதி 11 நகரங்களிலும் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பதிவானது.