அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அரச தலைவருக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
இதன்படி, இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்மொழிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கோட்டாபய தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தோல்வி! சுமந்திரனின் யோசனையும் நிராகரிப்பு
அரச தலைவருக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்க வேண்டாமென 119 வாக்குகளும், குறித்த பிரேரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி 68 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளை நிலையியற் கட்டளைக்கு அமைவாக முன்னெடுப்பதோடு, சுமந்திரனின் யோசனையை நிராகரிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.