சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள கோசாலை ஒன்றில் மாட்டுப் பொங்கல் அன்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, பசுமாட்டு கோமியம் குடிப்பது நல்லது, மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காமகோடியின் பேச்சை பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். மாட்டு கோமியம் உடம்புக்கு கெடுதல் என ஏற்கனவே அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்ட நிலையில், அறிவியல் ரீதியான ஒரு பல்கலைக்கழகத்தில் இயக்குநராக இருந்து கொண்டு காமகோடி இப்படி கூறியிருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது, அதற்கான ஆதாரம் உள்ளது.
பண்டிகையின் போது நாங்கள் பஞ்சகவ்யம் சாப்பிடுவது வழக்கம் என மீண்டும் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மீண்டும் பேசியுள்ளார். பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
The post கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது: ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் சர்ச்சை appeared first on Dinakaran.