விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்துள்ள காலத்தில், அந்த வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். தவறான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்பக் கூடாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து வீட்டு வாசலில் தெளித்துக் கொள்வது தான் வழக்கம்.
அதை குடித்தால் காய்ச்சல் போகும் என்று ஐஐடி இயக்குனர் கூறுகிறார் என்றால் அதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆளுநரை போல் மாறிவிட்டார். கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்வி நிலைய இயக்குநர் பேசியது வருந்தத்தக்கது. பகுத்தறிவு சிந்தனை உடைய யாரும் காமகோடியின் கருத்தை ஏற்க மாட்டார்கள். இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோமியம் குடித்தால் காய்ச்சல் போகுமா? மூட நம்பிக்கையை பரப்பாதீர்: ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி பதில் appeared first on Dinakaran.