*பொதுக்கூட்டத்தில் உதயசூரியன் எம்எல்ஏ பேச்சு
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில், சின்னசேலம் வடக்கு ஒன்றியம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி பன்னீர்செல்வம், துணைத்தலைவர் கலைச்செல்வி குமார், கிளை கழக செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி கிள்ளிவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, பேசும்போது, தலைவர் மு.க.ஸ்டாலின் சாதனைகள் குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குடியாநத்தம் புவியரசி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் எம்.பி. பேசும்போது தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் பாஜக ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதை முறியடிக்க தலைவர் ஸ்டாலின் ஓயாமல் உழைத்து வருகிறார். தலைவர் ஸ்டாலின், தமிழக மக்களின் தேவை அறிந்து தாயாகவும், தந்தையாகவும் இருந்து ஆட்சி நடத்தி வருகிறார் என்று பேசினார்.
மேலும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் கரும்பு விவசாயிகளின் நலன்கருதி சர்க்கரை ஆலை கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொண்டு வந்தவர் கலைஞர். அந்த திட்டத்தை ரத்து செய்தவர் ஜெயலலிதா.
அதனால் அப்போது நான் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து கட்டை வண்டி போராட்டத்தை நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு ஆதரவளியுங்கள் என்றார்.
இக்கூட்டத்தில் சங்கராபுரம் (தெ) ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர்கள் வடக்கநந்தல் ஜெயவேல், சின்னசேலம் செந்தில்குமார், வடக்கநந்தல் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் (எ) இளஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், தகவல் தொழில்நுட்ப அணி திலீபன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோம்பையன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி அமைப்பாளர் ஆற்றல் அரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அய்யாவு நன்றி கூறினார்.
The post கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவியது கலைஞர் ஆட்சியில்தான் appeared first on Dinakaran.