சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை கிலோ ரூ.20 வரை குறைந்திருந்தது. கடைசி வாரத்தில் ரூ.28 வரை உயர்ந்தது. இந்த நிலையில், மாத கடைசியில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதிகனமழை பெய்தது.