கோயம்பேடு – பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக, விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
கோயம்பேடு – பட்டாபிராம் வெளி வட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கே.கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் ஆகியோர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.